விஷாலும் சுயேச்சை வேட்பாளர்தான்.. தமிழிசை செம கலாய்!
விஷாலும் சுயேச்சை வேட்பாளர்தான் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: நடிகர் விஷாலும் மற்றவர்களை போல் சுயேச்சை வேட்பாளர்தான் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, பாஜக, தீபா பேரவை, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
நடிகர் விஷாலும் இதில் போட்டியிடுகிறார். ஆனால் தான் அரசியல்வாதி இல்லை என்றும் மக்கள் பிரதிநிதியாக போட்டியிட வந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழிசை செய்தியாளர்களுடன் சந்திப்பு
இந்நிலையில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்தார். அப்போது அங்கு வந்திருந்த தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களை சந்தித்தார்.

தனித்தன்மையுடன்
அவர் கூறுகையில், பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும். வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிப்பதற்கான சூழலை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி தர வேண்டும். பாஜக தனித்து போட்டியிடவில்லை, தனித்தன்மையுடன் போட்டியிடுகிறது. நாங்கள் ஆர்.கே.நகர் போன்று எத்தனையோ இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை சந்தித்துவிட்டோம். இது ஒன்றும் புதிதல்ல.

விஷால் சுயேச்சை வேட்பாளர்
வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்குவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றார். விஷால் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது தமிழிசை கூறுகையில், எத்தனை சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். அதுபோல் விஷாலும் ஒரு சுயேச்சை வேட்பாளர்தான்.

அதிகம் பேர் உள்ளனர்
எனவே சுயேச்சை வேட்பாளர்கள் குறித்து கருத்து சொல்ல முடியாது. சுயேச்சை வேட்பாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். இன்னும் வேட்புமனு தாக்கல் செய்ய குறுகிய நேரம் உள்ளதால் இதை நிர்வாக ரீதியாக எப்படி சமாளிப்பர் என்று தெரியவில்லை என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications