ஆர்.கே. நகரில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட வாய்ப்புகள் அதிகம்... இதுதான் காரணம்!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆர்.கே. நகர் தொகுதி காலியாக இருந்தது. அதனால் வருகிற ஏப்ரல் மாதம 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆர். கே. நகரை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்த நிலை தற்போது மாறியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி, தீபா அணி என்று மூன்றாக பிரிந்துள்ளது. இது திமுகவுக்கு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆர்.கே. நகர் தொகுதியில் நாடார் சமூகத்தினர் கணிசமான அளவுக்கு வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் திருவொற்றியூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். தொகுதி மறுசீரமைப்பில் அந்த பகுதி ஆர்.கே. நகர் தொகுதியோடு இணைக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் தமிழிசை சவுந்தரராஜன் ராயபுரத்தில் உள்ள புனித லூர்து அன்னை மேல்நிலை பள்ளியில் படித்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் ராயபுரம் பகுதியில்தான் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications