நாளை சட்டசபை கூடுகிறது.. பெரும்பான்மையை நிரூபிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
தமிழக சட்டசபை நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபை நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது என சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளார்.

ஆட்சி அமைக்க அழைக்காமல் இழுத்தடிப்பு செய்து கொண்டிருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், நேற்று அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபைக் குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

பதவியேற்பைத் தொடர்ந்து அடுத்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நாளை காலை 11 மணிக்கு சட்டசபை கூடும் எனவும் தலைமை செயலகத்திலுள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார்.
நாளை மறு நாள் சட்டசபை கூடுகிறது.. பெரும்பான்மையை நிரூபிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி pic.twitter.com/2ZNqMANhlU
— Oneindia Tamil (@thatsTamil) February 16, 2017
அன்றைய தினம் முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளார். முதல்வர். ஆட்சியைப் பிடித்த பி்ன்னரும் கூட அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரிலேயே தங்கியுள்ளனர். எனவே உண்மையிலேயே எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கான நாளை தெரிய வரும்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications