முண்டேவின் மறைவையொட்டி தமிழக பாஜக 3 நாள் துக்கம்: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மறைவையொட்டி தமிழக பாஜக சார்பில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் தமிழக தலைவரும் மத்திய இணை அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து துயரம் அடைந்தேன்.
தனது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
மராட்டிய மாநில எதிர்க்கட்சித் தலைவர், மாநில துணை முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பணிகளில் திறம்பட பணியாற்றியவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அவரது அகால மரணம் பாஜகவுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினரின் பெரும் துயரில் தமிழக பாஜகவும் பங்கேற்கிறது.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும். பாஜக கொடிகள் 3 நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அனைத்துப் பகுதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறும்
இவ்வாறு அந்த அறிக்சையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications