"அம்மா" வீட்டில் ரெய்டு.. மதுரையில் முதல்வர்.. அதிகாலையிலேயே மீனாட்சி அம்மன் தரிசனம்!
ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததால் தொண்டர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்க முதல்வர் பழனிசாமி அதிகாலையிலேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
Recommended Video

மதுரை : மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததால் தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
சசிகலா குடும்பத்தினரை சுற்றி வளைத்து நடத்திய வருமான வரி சோதனையால் மத்திய அரசு மீது ஆத்திரப்படாத அதிமுகவினர், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தியதன் மூலம் தொண்டர்களின் எதிர்ப்பலையை சம்பாதித்துள்ளது. ஏற்கனவே அதிமுக அரசு மத்திய அரசின் கட்டளையை ஏற்று செயல்படுவதாக மக்கள் குமுறி வருகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக வருமான வரி சோதனையை அடுத்து போயஸ் இல்லத்தில் போலீசாரை மட்டும் குவித்துவிட்டது அரசு. ஆனால் வருமான வரி சோதனை நடந்த சீனில் அமைச்சர்கள் யாருமே அந்தப் பக்கம் தலைகாட்டவே இல்லை. ஜெயலலிதாவின் இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தில் வருமான வரி சோதனை நடந்தது, ஆனால் அந்த பக்கம் ஜெயலலிதாவை தெய்வமாக வழிபடும் அமைச்சர்கள் யாரும் ஏன் வரவில்லை என்று கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

வருமான வரி சோதனை பற்றி முதல்வரோ, துணைமுதல்வரோ அல்லது தேவையில்லாத பிரச்னைகளுக்கெல்லாம் பேட்டி கொடுக்கும் அமைச்சர்களோ இது வரை வாய் திறக்கவேயில்லை. இந்நிலையில் மதுரையில் உள்ள முதல்வர் பழனிசாமி இன்று அதிகாலை 6 மணிக்கெல்லாம் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் உடன் இருந்துள்ளனர். அமைச்சர்கள் சகிதமாக வந்த முதல்வர் பழனிசாமிக்கு கோவில் நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்துள்ளனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications