டெல்லி சென்றார் முதல்வர் பழனிச்சாமி.. நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்ல இருக்கிறார்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றுள்ளார்.
தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. டிடிவி தினகரனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற வருடம் சந்தித்த நிகழ்வு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முதல்நாள் மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார்.
அதேபோல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்றுள்ளார்.
முதல்வர் பழனிச்சாமி பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார். இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அவர் டெல்லி சென்றுள்ளார்.
தமிழக மழை பாதிப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து அவர் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.












Click it and Unblock the Notifications