ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா கண்ணீர் அஞ்சலி
ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மாலை கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 5ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மறைந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரை எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் 6ம் தேதி மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் சென்னை வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று மாலை ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த முதலமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி குடும்பத்தினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் முதலமைச்சர் பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications