மக்கள் விரும்பும்படி ஆட்சி தொடரும்... சிவகங்கையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!
அதிமுக தொண்டர்களின் விருப்பம், எண்ணங்களின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை : அதிமுகவின் தொண்டர்கள், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசு செயல்படும் என்று முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற போது அவர் பேசியதாவது : மக்களின் விருப்பம், எண்ணத்திற்கு ஏற்ப அரசு தொடர்ந்து செயல்படும். அதிமுகவைச் சேர்ந்த 90 சதவீதம் பேர் விவசாயிகள் தான், ஏன் நான் கூட ஒரு விவசாயி தான். எனவே விவசாயிகள் நலனில் எப்போதுமே அதிமுக அரசு அக்கறையுடன் இருக்கும்.

இந்தியாவிலேயே தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது, திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு சட்டம், ஒழுங்கு பிரச்னையே முக்கிய காரணம். ஆனால் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே சட்டம், ஒழுங்கு சரியில்லாதது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர் என்றார்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூரில் புதிய பேருந்து நிலையம், சிவகங்கையில் 10 கிமீ தூரத்திற்கு புறவழிச்சாலைகள், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு புதிய கருவிகள் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
முன்னதாக 15,697 பயனாளிகளுக்கு ரூ. 39.07 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். ரூ. 34.67 கோடி மதிப்பில் முடிவுற்ற 127 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததோடு ரூ. 44.58 கோடி மதிப்பில் 88 புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்லும் நாட்டினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications