தமிழகத்தில் ஓர் மழைக்காலம்... விடிய விடிய பரவலாக மழை!
சென்னை: தமிழகம் முழுவதும் விடிய விடிய பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்வதால் இதமான சூழல் நிலவுகிறது.
தெற்கு ஆந்திர கடற்பகுதி முதல் குமரிக் கடல் பகுதி வரை வளிமண்டல கீழ் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. மேற்கு மாவட்டத்திலும் கனமழை பெய்த நிலையில், காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறிய நிலையில், தமிழகத்தில் பரலான மழை பெய்துள்ளது. இன்று காலையிலும் சாரல் மழை பெய்வதால் இதமான சூழல் நிலவுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மழை
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது, அதிகட்பசமாக ஓலம்பாளையத்தில் 106 மில்லிமீட்டர் மழையும், கோபியில் 26 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

மின்சாரம் துண்டிப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை, பேளூர், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. மேட்டூரில் திடீரென இடிமின்னலுடன் கன மழை, குளிர்ந்த சூழல் உருவாகி உள்ளது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

வேலூரிலும் சாரல் மழை
இதே போன்று இராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 1 மணி நேரமாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் விடியற்காலை முதல் சாரல் மழை பெய்துள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி
வேலூர் மாவட்டம் அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடியற்காலை முதல் மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையிலும் சாரல் மழை
சென்னையில் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் நகரின் சில பகுதிகளில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications