கக்கூஸில் காசு பொறுக்குகிறது தமிழக அரசு- எச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு- வீடியோ

தமிழக அரசு, ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் கழிவறை கட்டும் திட்டத்தில்கூட ஊழல் செய்கிறது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிவறை கட்டும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் தமிழக அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஊழல் செய்கின்றனர். கக்கூஸில் காசு பொறுக்குகின்ற அரசாக தமிழக அரசு உள்ளது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஸ்வச் பாரத் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டப்பட்டு, தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என கூறி பரப்புரை செய்யப்பட்டு வருகிறது.

 Tamilnadu government bribing even in Swatch bharat scheme said H.Raja

இதுகுறித்து பாஜக தேசிய செயலளர் எச்.ராஜா கூறுகையில்,''தமிழகத்தில் ஒவ்வொரு மாநகரட்சியின் கீழும் 1000 கழிவறை கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதில் ஊழல் செய்கின்றனர்.

ஏற்கனவே கட்டியுள்ள கழிவறைக்கு பெயிண்ட் அடித்து, புதிதாக கட்டியதாக கணக்கு காண்பிக்கின்றனர். கணவன் பெயரில் ஒரு ரசீது, மனைவி பெயரில் ஒரு ரசீது என பொய்க்கணக்கு காண்பிக்கின்றனர். கக்கூஸில் கூட காசு பொற்றுக்குகிற அரசாக அதமிழக அரசு இருக்கின்றது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அக்கிரமம் நடக்கவில்லை'' என கூறினார்.

மேலும், தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள கருவிகள் அனைத்தும் தரமற்றவை. கடந்த ஐந்தாண்டுகளில் வாங்கப்பட்ட அனைத்து மருத்துவ கருவிகளும் தரமற்றவை. அதுகுறித்து எனக்கு ஆதரப்பூர்வமான தகவல்கள் வந்துள்ளன'' என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+