டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு டாக்டர்கள், நர்சுகள் நியமனம்: முதல்வர்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 10 நாட்களில் 744 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேலும் 2,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
தருமபுரி: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு டாக்டர்கள், நர்சுகள் பணியமர்த்தப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று மாலை தருமபுரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது தெரிவித்தார்.
மரத்தை விட்டு பூ கீழே விழுவதால் மரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. பிரச்னையை எப்படி சமாளிக்க வேண்டும் என எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக் கொடுத்துள்ளார்
டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் உடனடியாக அரசு மருத்துவமனையை மக்கள் அணுக வேண்டும்.

நிலவேம்பு கசாயம்
டெங்குவை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிப்பு, நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சிறப்பு மருத்துவர்கள் நியமனம்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 10 நாட்களில் 744 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேலும் 2,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஸ்டாலின் மீது தாக்கு
அரசுக்குநெருக்கடி கொடுத்து கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. ஆட்சியில் ஏதாவது குறை இருக்குமா என பூதக்கண்ணாடி வைத்து தேடுகிறார் ஸ்டாலின். விழாவில் முதல்வர் பேசுகையில், 5 முறை வாய்ப்பளித்தும் ஆட்சியை மக்கள் நலனுக்காக திமுக பயன்படுத்தவில்லை.

தருமபுரிக்கு திட்டங்கள்
டாக்டர் முத்துலெட்சுமி திட்டத்தின் கீழ், 87 ஆயிரம் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 27 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. தருமபுரி பின்தங்கிய மாவட்டம் என்பதால் 9000 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

சிறப்பு நகராட்சியாகிறது தருமபுரி
தருமபுரி நகராட்சி, சிறப்பு நகராட்சியாக தரம் உயர்த்தப்படும், சோகத்தூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்ப்டும். பாலக்கோட்டை தலைமையிடமாக கொண்டு காவல் உட்கோட்டம் தொடங்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார். விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், திமுக எப்போதுமே ஆட்சியில் இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications