நாடு முழுவதும் விற்பனைக்கு செல்லும் "அம்மா உப்பு"... தமிழக அரசு திட்டம்
சென்னை : தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் 'அம்மா உப்பு' இந்தியாவின் பிறமாநிலங்களிலும் விற்பனைக்கு அனுப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை முடிவு தொடர்பான அறிக்கையில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தமிழ்நாடு உப்பு உற்பத்திக் கழகத்தால் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் ‘அம்மா உப்பு இனி டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், கர்நாடகம், கேரளா, ஆந்திரப்பிரதேசம், அரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் அளித்துவரும் அமோக ஆதரவால் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம்வரை சுமார் 6 ஆயிரத்து 760 டன் அளவுக்கு அம்மா உப்பு விற்பனையாகி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications