வறட்சி மாநிலமானது தமிழகம்.. விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி ரத்து: முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் ரத்து செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் நடத்திய ஆய்வு அறிக்கை இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும பயிர்க்கடனை மத்தியக்கால கடனாக மாறியமைக்க வழிவகை செய்யப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் ஊரக வேலை உறுதித் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications