7 பேரையும் விடுதலை செய்வதில் அரசு உறுதியாக உள்ளது.. அமைச்சர் ஜெயக்குமார்!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் இதுதொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரைக்கலாம் என்றும் சுப்ரிம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் 7 பேரையும் தமிழக அரசு விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் 15வது நிதிக்குழு கூட்டத்திற்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம் கிடைத்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications