நிலையான முதலமைச்சர் வேண்டும்... கருணாஸின் ஆவேசப் பேச்சுக்குக் காரணம் என்ன? - வீடியோ
சென்னை: நிலையான முதலமைச்சர் வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் என இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் ஆவேசமாக கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், முக்குலத்தோர் புலிப்படை சார்பாக, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடனைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நடிகர் கருணாஸ்.

அதிமுக இரண்டாகப்பிளவுபட்டு, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் அடைக்கப்பட்டிருந்தபோது கருணாஸ் பெயர் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ்,'' ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று என்னால் பொறுப்பற்றவனாக இருக்க முடியாது. தமிழகத்துக்கு நிலையான முதலமைச்சர் வேண்டும்.
ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான்கு ஆண்டுகள் ஆட்சியை திறம்பட நடத்திட வேண்டும்'' என ஆவேசமாகப் பேசினார்.
இரண்டு அணிகளும் இதோ இணையப்போகிறோம் , அதோ இணையப் போகிறோம் என போக்குக் காட்டிக்கொண்டிருந்ததால் அதிமுகவின் தொண்டர்கள் அயர்ச்சியடைந்துவிட்டனர். இந்நிலையில் கருணாஸ், 'நிலையான முதலமைச்சர் வேண்டும்' என்று கூறியிருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications