கேரளாவில் போலீஸ்-நக்சலைட் துப்பாக்கி சண்டை.. தமிழக எல்லையில் உஷார் நிலை
ஊட்டி: கேரள வனப்பகுதியில் நக்சலைட்டுகள்-போலீசார் நடுவே துப்பாக்கி சண்டை நடைபெற்றதையடுத்து தமிழக எல்லையான நீலகிரியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கேரள வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் அவ்வப்போது போலீஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது. நக்சலைட்டுகளை ஒடுக்க கேரள அரசு தொடர்ந்து திணறி வருகிறது.

இந்நிலையில், இன்று காலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் நிலம்பூர் அருகே உள்ள கேரள வனப்பகுதியில் போலீசார்-நக்சலைட்டுக்ல நடுவே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.
ஆனால் இதில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதுவும் இதுவரை வெளியாகவில்லை. தாக்குதல் குறித்து தமிழக உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்ததும், இரு மாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நக்சலைட்டுகள், தமிழகத்திற்குள் ஊடுருவிவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications