18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட 8 வழக்குகள்... டிசம்பர் 6க்கு ஒத்திவைப்பு!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவை தொடர்பாக தொடரப்பட்ட 8 வழக்குகளின் விசாரணை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று முதல் டிசம்பர் 20ம் தேதி வரை இந்த வழக்குகளில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தரப்பில் 4 முக்கிய வாதங்கள் முன் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. முதல்வர் பழனிசாமியை மாற்றக் கோரி மனு அளித்த தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு நடைபெற்றது.

இன்று இந்த வழக்கில் சபாநாயகர் தனபால் தரப்பில் வழக்கறிஞர் அரியமாசுந்தரம் ஆஜராகி வாதாடினார். அப்போது 4 முக்கியமான விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. கொறடா கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே சபாநாயகர் தனபால் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார். சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது, கட்சிக்கு எதிராக செயல்படவில்லை என்று எம்எல்ஏக்கள் தான் நிரூபிக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதிமுகவிற்கு உரிமை கொண்டாடி அவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்ததால் வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதல்வராக இருந்த எடியூரப்பா வழக்கும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கும் ஒன்றல்ல. இரண்டுமே முதல்வரை மாற்றும் வழக்கு தான் என்றாலும், கர்நாடகாவில் முதல்வரை மாற்ற எம்எல்ஏக்கள் கூறினாலும் ஆட்சிக்கு பங்கம் வரவில்லை. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில்ஆட்சியையே மாற்றும் நடவடிக்கை என்பதால் 18 பேரையும் நீக்கியதாக சபாநாயகர் தரப்பு வாதம். தமிழகத்தில் முதல்வரை மாற்றினால் ஆட்சியையே மாற்றும் நடவடிக்கைக்கு சமம். கட்சிக்கு எதிராக செயல்படவில்லை என்று நிரூபிக்க வேண்டியது எம்எல்ஏக்களின் கடமை என்றும் அவர் வாதாடினார்.
இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதம் பிற்பகலிலும் நீடித்தது. இதனையடுத்து எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட 8 வழக்குகளை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். டிசம்பர் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications