வார்டு சீரமைப்பு பணி நடப்பதால் தேர்தல் நடத்த முடியாது... அவகாசம் கோரியது தேர்தல் ஆணையம்!
வார்டுகள் மறுசீரமைப்பு பணி நடப்பதால் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளது.
மதுரை : வார்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இப்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் அவகாசம் கோரியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை 15 நாட்களில் அறிவிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மாநிலத் தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் வார்டுகளை மறுவரையறை செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடைபெற்றால் பிரச்னைகள் ஏற்படும். வார்டு மறுவரை முடியாததால் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது. வார்டு வரையறைக்காக 1.3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் 19 ஆயிரம் மனுதாரர்களின் வார்டு மறுவரையறையை சரிசெய்வதில் பிரச்னை நிலவுகிறது.
வார்டு சீரமைப்பு பணி முடிய 2 மாதத்திற்கு மேல் ஆகலாம், அது வரை தேர்தல் நடத்த முடியாது என்று நீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அவகாசம் கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள் வார்டு வரையறை பிரச்னையை காரணம் காட்டி தேர்தல் தேதி அறிவிப்பை ஒத்திவைத்துக் கொண்டே போவதை ஏற்க முடியாது என்றனர்.
மேலும் வார்டு வரையறைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து வழக்கு விசாரணையானது 2 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications