தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்-சென்னையில் 20,000 போலீசார் குவிப்பு
தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடப்பதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடப்பதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீஸ் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

ஆனாலும் பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரணமாக மக்கள் அரசின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி இன்று தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம், பேருந்து நிறுத்தம் கடைபிடிக்கப்படுதுகிறது. இந்த நிலையில் சென்னையில் முதல்வர் பழனிச்சாமி இல்லத்திற்கு முன் போராட்டம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு. சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் நடக்க வாய்ப்புள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் போலீஸ் ரோந்து பணி செய்து வருகிறது.பேருந்து பணிமனைகளில் அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications