தமிழகத்தில் களைகட்டிய மாட்டுப்பொங்கல் : மாட்டுத் தொழுவங்களில் பொங்கல் வைத்து வழிபாடு!
மதுரை: தமிழகம் முழுவதும் கிராமங்களில் இன்று மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உழவர்கள் அதிகாலையிலேயே மாடுகளை அலங்கரித்து அவற்றிற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
தைத் திருநாளின் 2-ம் நாளான இன்று, உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பர்களான மாடுகள் தெய்வமாக வணங்கப்படும். மாட்டு தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து இன்றைய பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் மிக முக்கிய விழாவாக கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவிற்கும், விவசாயத்திற்கு உதவி புரியும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் தைப் பொங்கல் தினத்திற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.
மாடுகளுக்கு அலங்காரம்
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே விவசாயிகள் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து அலங்கரித்தனர். பின்னர் ஆண்டுதோறும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் கால்நடைகளை குளிக்க வைத்து சுத்தம் செய்து அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் பூசியும்,குங்குமப் பொட்டிட்டு வைத்தும் அலங்கரித்தனர்.
கோவை சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களில், இரண்டு ஆண்டுக்கு பிறகு விவசாயம் செழிப்படைந்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். மாட்டுத் தொழுவத்துடன் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல சுத்தம் செய்து விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரித்தனர். மாடுகள் அணிந்திருக்கும் கயிறுகளை மாற்றி, கழுத்து மற்றும் கொம்புகளில் சலங்கை அணிவித்தும் அலங்கரித்தனர்.
மாடுகளுக்கு வழிபாடு
விளைநிலங்களில் விளைந்த பொருட்களை மிகப்பெரிய தட்டுக்களில் வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் படைத்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கலிட்டனர். இதனையடுத்து பசு, காளை, எருமை, ஆடுகள் என அனைத்து கால்நடைகளுக்கும் தீபாராதனை காட்டி பொங்கல், பழம் கொடுத்து பூஜைகளை நிறைவு செய்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட மாடுகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட்டனர்.
கிராமங்களில் மாட்டுப்பொங்கல்
விவசாயத்தில் கால்நடை பயன்பாடு குறைந்து, நவீன இயந்திரமயமாக்கல் புகுந்து விட்டது. இதனால், பால் கறவைக்கு மட்டுமே மாடுகள் வளர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. விவசாய குடும்பத்து இளைஞர்கள், வேலைவாய்ப்புக்காக நகரங்களை நோக்கி சென்றுவிட்டனர். இத்தருணத்தில், கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி, பண்டைய கலாசாரங்களை இளைய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ள, கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
களை இழந்த வாடிவாசல்கள்
மாட்டுப் பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கமாக இன்று நடைபெறும். ஆனால், நீதிமன்றத் தடை காரணமாக இந்த ஆண்டு இந்த கொண்டாட்டங்கள் இல்லாமல், தைத் திருநாளின் இரண்டாம் நாளான இருந்து வாடி வாசல்கள் களையிழந்து காணப்படுகின்றன.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications