இன்று இரவு முதல் 2வது சுற்று பருவமழை தொடங்குகிறது... இது தமிழ்நாடு வெதர்மேனின் அலெர்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் கனமழை வெளுக்குமாம்...வானிலை மையம்! வார்னிங்- வீடியோ

  சென்னை: வடகிழக்குப் பருவமழை தனது இரண்டாவது சுற்றை இன்று இரவு தொடங்குவதாகவும் புதன்கிழமை வரை மழை விட்டு விட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் மழை தொடர்பான சிறப்பு அப்டேட்டை பதிவிட்டுள்ளார். அதில் வடகிழக்குப் பருவமழையின் 2வது இன்னிங்ஸ் தொடங்குவதற்கான மேகத்திரள் கூட்டம் தமிழக வடகடலோர மாவட்டத்தில் தெரிவதாகவும் இதனால் இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

  பருவமழையின் போது உருவாக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது 3 முதல் 4 நாட்கள் வரை நீடிக்கும். கடந்த முறை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை 9 நாட்கள் வரை மழையைத் தந்தது. இதைத் தொடர்ந்து 3 நாட்கள் மழை இடைவெளி விட்டிருந்தது.

  குறைந்த காற்றழுத்தம்

  குறைந்த காற்றழுத்தம்

  தற்போது இரண்டாவது காற்றழுத்த தாழ்வு நிலையானது தமிழகத்தின் வட கடலோர மாவட்டத்தில் உருவானதால் நாகப்பட்டினம் முதல் சென்னை வரை பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த முறையும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக இந்தப் பகுதிகளில் கனமழையை பெற்றுள்ளன.

  கனமழை எச்சரிக்கை

  கனமழை எச்சரிக்கை

  வடகடலோரப் பகுதியில் குறைந்த கார்றறழுத்தம் உருவாகி இருந்தாலும்,மேகக் கூட்டங்கள் பரவலாக எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனவே வட கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரின் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

  இரவு தொடங்குகிறது

  இரவு தொடங்குகிறது

  குறைந்த காற்றழுத்தம் காரணமாக இன்று இரவு முதல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த மழையானது புதன்கிழமை வரை விட்டு விட்டு மழையைத் தரும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

  அச்சம் தேவையில்லை

  நவம்பர் 15ம் தேதிக்குப் பின்னர் காற்றழுத்தமானது வடக்கில் இருந்து நகரும் என்பதால் காற்றின் போக்கை பொறுத்து தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை தொடங்கிய பின்னர் அதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்பது தெரிய வரும் என்றும் இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamil Nadu Weatherman Special Update says 2nd active spell of North East monsoon to start for North TN Coast from Tonight. Chennai, Thiruvallur, Kancheepuram districts will get heavy rains teh prediction adds.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற