தமிழகத்தில் தொங்கு சட்டசபை மட்டும் அமையாது.. அடித்து சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்
சென்னை: 150 தொகுதிகளில் வெற்றி பெற்று பாமக ஆட்சி அமைக்கும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டிவி சேனல் ஒன்றுக்கு அன்புமணி அளித்த பேட்டி: பாமகவின் பிரசாரம் மக்களிடையே சென்றடைந்துள்ளது. எங்களது குறிக்கோள் இளைஞர்கள்தான். அவர்களை கவர்ந்துள்ளோம். 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் 60 விழுக்காடு பொதுவாக்காளர்கள். அதில் 3ல் இரண்டு விழுக்காடு இளைய வாக்காளர்கள். அவர்களிடம் எங்களுடைய செய்திகள் சென்றடைந்துள்ளது. அன்புமணியால் மட்டுமே பூரண மதுவிலக்கை கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சராக இருந்தபோது போலியோ ஒழிப்புக்காக நான் பாடுபட்டேன். ஜனாதிபதி என்னை அழைத்து பாராட்டினார். 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வந்தேன். அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக நான் இருந்தபோது லயோலா கல்லூரி ஒரு சர்வே எடுத்தது. அதில் தமிழகத்தில் இருந்து சென்ற 13 அமைச்சர்களில் அன்புமணி சிறந்தவர் என்று சர்வே சொன்னது. அப்போது இருந்த அமைச்சர்களில் 4 சர்வதேச விருதுகளை பெற்றேன்.
இன்றைக்கு தேர்தல் நடந்தால் நாங்கள் 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். நாங்கள் ஆட்சிக்கு வரப்போகிறோம். தொங்கு சட்டசபை என்ற பேச்சுக்கே இடமில்லை. உறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வருகிறோம். நாங்கள் செல்லும் இடமெல்லாம், இளைஞர்கள், விவசாயிகள், நெசவு தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு உள்ளது. திமுக அதிமுக வேண்டாம். புதிய ஆட்சி வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications