தமிழக பாஜக புதிய தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்!!

பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் இன்று பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக மாநில பொதுச்செயலர், துணைத் தலைவராக ஏற்கனவே பணியாற்றியவர் தமிழிசை சவுந்தரராஜன்.
பாஜக விதிகளின்படி மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் மாநிலத் தலைவராக இருக்க முடியாது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சராகி விட்டதால் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டது.
மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளதால் தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டது. ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மாநிலத் தலைவர் பதவிக்காக பலரும் டெல்லியில் முகாமிட்டு மேலிடத் தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுத்தனர்.
பாஜக தேசிய தலைவராக அமித் ஷா பொறுப்பேற்ற பிறகு தமிழகத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை அக்கட்சி தொடங்கியது. புதிய தலைவர் குறித்து கருத்துக் கேட்பதற்காக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த மாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஹெச். ராஜா தேசிய செயலாளராக இன்று நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் புதிய தலைவராக தமிழசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவரான தமிழிசை சவுந்திரராஜன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது..
முதல் பெண் தலைவர்
தமிழகத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதாவின் முதலாவது பெண் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தேசிய அளவில் பாஜகவில் மாநிலத் தலைவர் பதவி ஏற்கும் 2வது பெண் தமிழிசை.
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போதைய முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா அம்மாநில பாஜக தலைவராக ஏற்கெனவே பணியாற்றியவர்.
வரலாறு படைப்போம்
மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ள தமிழிசை சவுந்தரராஜன், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவராக அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கு எனது சேவை தொடரும்.
தமிழகம் முழுவதும் பாஜகவை கொண்டு சேர்க்கவேண்டும். மத்தியில் வரலாறு படைத்தது போல 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக விற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications