டிடிவி தினகரன்- வைத்திலிங்கம் எம்பி ஆதரவாளர்கள் மோதல்: தஞ்சாவூரில் பதற்றம்
டிடிவி தினகரன் மற்றும் வைத்திலிங்கம் எம்பி ஆதரவாளர்களிடையே தஞ்சாவூரில் கைகலப்பு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
சென்னை: டிடிவி தினகரன் மற்றும் வைத்திலிங்கம் எம்பி ஆதரவாளர்களிடையே தஞ்சாவூரில் கைகலப்பு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

அதிமுக அம்மா அணியிலிருந்து வைத்திலிங்கம் எம்பியை நீக்கியதாக டிடிவி தினகரன் அறிவித்தார். இதனால் கொந்தளித்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தஞ்சாவூரில் தினகரன் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

இதனைத் தினகரன் ஆதரவாளர்கள் தடுக்க முயன்றனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது.
போலீசார் முன்னிலையிலேயே ஒருவரையொருவர் பிடித்து தள்ளி மோதலில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், உருட்டுக்கட்டைகளைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்க முயன்றனர்.
இதனையடுத்து களத்தில் இறங்கிய போலீசார், இரண்டு தரப்பினரையும் தடுத்துச் சமாதானப்படுத்தியதால் பெரும் மோதல் நடக்காமல் தடுக்கப்பட்டது. பின்னர் வைத்திலிங்கம் ஆதரவாளர்கள், தினகரன் உருவபொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர்.
இந்தச் சம்பவத்தால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications