சின்னஞ்சிறுமியை சிதைத்த கொடூர இளைஞன் – 10 வருடம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி!
தஞ்சை: தஞ்சை அருகே 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு பத்து வருட சிறை விதித்து தஞ்சை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உண்ணா மாவட்டத்தில் உள்ள புல்லா கிராமத்தை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் என்ற இளைஞர். இவர் தஞ்சையில் தங்கி இருந்து தள்ளுவண்டியில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில், இவர் தஞ்சை கீழவாசல் பகுதியில் ஐஸ் வியாபாரம் செய்த போது, அங்குள்ள ஒரு மளிகைக்கடை அருகே 4 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.
அந்த சிறுமியை ராம்பிரகாஷ் தூக்கிச்சென்று தஞ்சை டபீர் குளம் சாலையில் உள்ள பொதுக்கழிப்பிடத்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது சிறுமி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்டு, ராம்பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்பு ராம்பிரகாஷ் மீது தஞ்சை நகர கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி மோகன்தாஸ், குழந்தையை கடத்திச்சென்றது மற்றும் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 2 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது.
குழந்தைகள் மீது பாலியல் சம்பவம் நடைபெறுவதை தடுக்கும் விதமாக குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கடும் தண்டனை அளித்தால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறையும். அதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது இந்த தீர்ப்பு.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications