‘கிளார்க் வேலை செய்வதற்காக மோடியை பிரதமராக்கவில்லை’.. 7வது நாள் போராட்டத்தில் பெ. மணியரசன் காட்டம்
தஞ்சையில் விவசாயிகள் 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து தஞ்சை விவசாயிகள் போ
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் முற்றுகை போராட்டம் 7வது நாளாக நடைபெற்று வருகிறது.
காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும். விளை நிலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது. காவிரி சமவெளியை பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பெ. மணியரசன், இதர விவசாய சங்கள், பெண்கள், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பந்தல் அமைத்து..
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகிலேயே தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் பந்தல் அமைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கூழாங்கள்
விவசாயிகள் கழுத்திலும், இடுப்பிலும் வேப்பிலையை கட்டி கொண்டும் வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் படும் துயரை பிரதமருக்கு தெரிவிக்கும் வகையில் வாயில் கூழாங்கற்களை வைத்து போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

சேறு பூசி…
டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் போன்று, தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் உடல் முழுவதும் சேற்றைப் பூசியபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7வது நாள்
விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழக அரசும் இதுவரை எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எனவே, விவசாயிகள் தொடர்ந்து போராட முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் 7வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

‘கிளார்க்’ மோடி
போராட்டக்களத்தில் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அரசு என்பது மக்களுக்கான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். கொள்கையற்ற முடிவுகளை எடுக்கக் கூடாது. கிளார்க் வேலை செய்வதற்காக மோடியை பிரதமராக்கவில்லை. எடப்பாடி முதல்வராக்கவில்லை. கொள்கை முடிவுகளை உடனுக்குடன் எடுத்து செயல்படுத்த வேண்டும்.

எதிர்வினை
மாநில அரசு 39,565 கோடி வறட்சி நிவாரணம் கேட்டது. 1,728 கோடியைத்தான் மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. இதனை ஏன் மாநில அரசு கண்டிக்க வில்லை. கூடுதலாக கொடுங்கள் என்று கூட ஏன் மாநில அரசு கேட்கவில்லை. அப்படியானால் மோடியும், எடப்பாடி பழனிச்சாமியும் திரைமறைவில் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்தாலும் எதிர்வினையாற்றாமல் இருப்பதற்கு இதுதான் காரணம் என்று கடுமையாக மணியரசன் குற்றம்சாட்டினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications