விடிய விடிய ஆட்சியர் அலுவலகம் முன்… 8வது நாளாக நீடிக்கிறது தஞ்சை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சையில் விவசாயிகள் 8வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து தஞ்சை விவசாயிகள் போர
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் முற்றுகை போராட்டம் 8வது நாளாக நடைபெற்று வருகிறது.
காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும். விளை நிலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது. காவிரி சமவெளியை பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பெ. மணியரசன், இதர விவசாய சங்கள், பெண்கள், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகிலேயே தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் பந்தல் அமைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மோடிக்கு தெரிவிக்க..
விவசாயிகள் கழுத்திலும், இடுப்பிலும் வேப்பிலையை கட்டி கொண்டும் வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் படும் துயரை பிரதமருக்கு தெரிவிக்கும் வகையில் வாயில் கூழாங்கற்களை வைத்து போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

நூதனப் போராட்டம்
டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் போன்று, தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் உடல் முழுவதும் சேற்றைப் பூசியபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8வது நாள்
விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழக அரசும் இதுவரை எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எனவே, விவசாயிகள் தொடர்ந்து போராட முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் 8வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications