மனவளர்ச்சி குன்றிய சிறுமி பலாத்காரம்.. பெயிண்டருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை: தஞ்சை கோர்ட் அதிரடி
தஞ்சையில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த பெயிண்டருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video

தஞ்சை : தஞ்சையை அடுத்த பட்டுக்கோட்டையில் 2017ம் ஆண்டு மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெயிண்டருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிவகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் சுப்ரமணியன். இவருக்கு வயது 50. இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதன் விளைவாக கர்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அச்சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் கடந்த 2017ம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக பெயிண்டர் சுப்ரமணியனுக்கு 4 ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 6 மாத சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
மேலும், சுப்ரமணியனை உடனடியாக சிறையில் அடைக்கும்படியும், அவர் சாகும் வரை சிறையில் இருக்கவேண்டும் என்றும், அவர் இறந்த பின்னர் பிணமாகத்தான் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications