"ஹேப்பி நியூஸ்".. கடந்த ஆண்டை விட டாஸ்மாக் சேல்ஸ் டல்.. தீபாவளி விற்பனை ரூ. 132 கோடிதானாம்!!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ. 132 கோடி ரூபாய் அளவிற்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியள்ளன.
Recommended Video

சென்னை : தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 132 கோடி அளவிற்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது கடந்த ஆண்டைவிட குறைவாகத் தான் விற்றுள்ளதாம்.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள், நீதிமன்ற உத்தரவு காரணமாக நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் வருமானம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தீபாவளி பண்டிகையின்போது ரூ. 250 கோடிக்கு விற்பனையாகும் என்ற நிர்வாகம் எதிர்பார்த்தது.
டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூலம், சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.65 முதல் ரூ.70 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும். வார விடுமுறை நாட்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரை விற்பனையாகும். போனஸ் விற்பனை அதிகரிப்புகளால் மது விற்பனை அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

டாஸ்மாக் மூடியதால் பாதித்த வருமானம்
தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல கடந்த 2016ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா 500 மதுபான கடைகளை மூடினார். அதன் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 500 கடைகளை மூடினார். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 31ம் தேதியுடன் 3,321 மதுபான கடைகள் மூடப்பட்டன.

புதிய கடைகள் திறப்பு
இதனால் ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் மது விற்பனை பாதித்தது. மதுபானக் கடைகள் குறைந்த போதிலும் ஜூன் மாத இறுதிக்குள் வழக்கமான விற்பனையை தொட்டது. ஜூலை மாதம் முதல், மாதம் ஒன்றுக்கு வழக்கம் போல் 47 லட்சம் மதுபான பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டது. மூடப்பட்ட 4,321 கடைகளுக்கு பதில் புதிதாக ஆயிரத்துக்கும் அதிகமான மதுபான கடைகள் திறக்கப்பட்டது.

விற்பனை எவ்வளவு
இந்நிலையில் வருமானத்தை அதிகரிக்க முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி பீர் மற்றும் குவாட்டர் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தீபாவளிக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் ரூ. 232 கோடி என்ற விற்பனையை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விற்பனை மந்தம்
தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக சரக்கு கொள்முதல் செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்துள்ளது. ஆனால் இலக்கை எட்ட முடியாவிட்டாலும் தீபாவளியன்று ரூ. 132 கோடிக்கு விறப்னை நடைபெற்றுள்ளது. தீபாவளிக்கு முந்தைய தினம் ரூ. 91 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

அதிகாரிகள் தகவல்
கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாளிலும் ரூ. 245 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு அது குறைவு தான் என்று சொல்லப்படுகிறது. அக்டோபர் 17, 18 இரண்டு நாட்களையும் சேர்த்து ரூ.223 கோடி அளவிற்கே விற்பனை நடைபெற்றுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications