பேய்க்காற்று... பெருமழைக்கும் நடுவே சென்னையில் சக்கைபோடு போட்ட டாஸ்மாக் பிசினஸ்
வர்தா புயல் வாட்டி வதைத்தபோதும் சென்னையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் ஓயவில்லை. மெழுகுவர்த்தி வெளிச்சத்துக்கும் இடையே இரவெல்லாம் டாஸ்மாக் மதுபான விற்பனை ரெக்கை கட்டி பறந்தது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை நிலைகுலையச் செய்த வர்தா புயலால் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் சென்னையே தனித் தீவாகிப் போனது. இந்த பெருந்துயரத்துக்கும் நடுவேயும் டாஸ்மாக் மதுபான விற்பனை வெகுஜோராக நடந்தேறியுள்ளது.

சென்னையை 7 மணிநேரம் வர்தா புயல் விரட்டி விரட்டி தாக்கியது. இதனால் சென்னை நகரம் நேற்று பகலிலேயே இருளாகிப் போனது. பேரிரைச்சலுடன் பெருமழையும் சேர்ந்து கொள்ள சென்னை நகரவாசிகள் ரொம்பவே குலைநடுங்கிப் போயினர்.
இப்பெருமழையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. கொட்டும் மழையிலும் புயலைப் பற்றிய அச்சம் ஏதுமின்றி 'வேற்றுகிரக'வாசிகளைப் போல டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. இரவில் மின்சாரம் இல்லாத நிலையிலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் பிசினஸ் சக்கை போடு போட்டது.












Click it and Unblock the Notifications