ஏற்கனவே 'சரக்கு' சரியில்லை என புலம்புகிறார்கள்.. இதில் தண்ணீர் கலந்து விற்ற டாஸ்மாக் ஊுழியர் -கைது

ஈரோடு, அகில்மேடு வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (38). இவர், தான், பணியாற்றி வரும் கடையில் உள்ள மதுபானங்களை விற்பனை செய்யும் போது, விலை உயர்ந்த மதுபானங்களின் மூடியை உடைத்து தண்ணீர் கலந்து மோசடியாக விற்பனை செய்து வந்ததாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. மேலும், இது குறித்து காவல்துறையிலும் புகார் செய்யப்பட்டது.
இதனையடுத்து, காங்கேயம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீஸார் அந்த மதுக்கடைக்கு திடீர் விசிட் அடித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது, விலை உயர்ந்த மதுபானங்களின் மூடியை உடைத்து தண்ணீர் கலந்து மோசடியாக விற்பனை செய்தது உண்மை என தெரிய வந்தது.
இதனையடுத்து, டாஸ்மாக் விற்பனையாளர் தாங்கராஜை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்யதனர்.
ஏற்கெனவே லக்காபுரத்தில்..!
இவர், ஏற்கெனவே லக்காபுரத்தில் பணியாற்றிய போது கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications