டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொது மக்கள்
குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடையநல்லூர் எம்.எல்.ஏ., அபுபக்கரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
செங்கோட்டை: செங்கோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடையநல்லூர் எம்.எல்.ஏ., அபுபக்கரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டடதைத் தொடர்ந்து பிற பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். மூடிய டாஸ்மாக் கடைக்கு பதில் வேறு இடத்தை தேர்வு செய்து புதிய கடை அமைக்கும் பணி பல இடங்களில் நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் செங்கோட்டை, வல்லம் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கரை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக தெரிவித்தார். இதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், பொது மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டை, தென்காசி, தென்மலை,பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அண்மையில் மூடப்பட்டன. இந்த நிலையில், செங்கோட்டை - வல்லம் சாலையோரம் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைக்கு அதிகளவில் கூட்டம் வரத் தொடங்கியது.
இதனால், வல்லம், செங்கோட்டை பகுதி பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் சாலை ஓரத்தில் இயங்கும் இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும், புதிய கடைகளை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications