“புல்” போதையில் கடைக்குள் மட்டையான டாஸ்மாக் ஊழியர் சஸ்பெண்ட்- நாமக்கல்லில்!
நாமக்கல்: நாமக்கல்லில் குடியரசுதினத்தன்று டாஸ்மாக் கடைக்குள்ளேயே விற்பனையாளர் குடித்துவிட்டு மயங்கி கிடந்த காரணத்தினால் அவரை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து "டாஸ்மாக்" கடைகளும் அடைக்கப்பட்டன. புதன்கிழமை காலை 10 மணிக்கு வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

ஆனால் நாமக்கல் மாவட்டம், பரமத்தி சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை காலை 10 மணியைக் கடந்தும் திறக்கவில்லை. தகவலறிந்து அங்கு வந்த அதிகாரிகள் கடையின் ஷட்டர் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கடையில் வேலை செய்யும் மற்ற ஊழியர்கள் துணையுடன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்றனர். அங்கு கடை விற்பனையாளரான ராசிபுரத்தை சேர்ந்த ராஜா என்பவர் போதை தலைக்கேறிய நிலையில் கிடந்தார்.
மேலும் குடியரசு தினத்துக்கு முதல் நாள் விற்பனை செய்யப்பட்ட தொகையும் உள்ளே அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து மாற்று ஊழியரைக் கொண்டு கடை விற்பனையை தொடர்ந்தனர். கடைக்கு விடுமுறையானாலும் கடையை கவனித்துக் கொள்வதற்காக வந்த ராஜா சரக்கடித்துவிட்டு போதையில் தூங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடை விற்பனையாளர் ராஜாவை டாஸ்மாக் மாவட்ட நிர்வாக மேலாளர் "சஸ்பெண்ட்" செய்து உத்தரவிட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications