பச்சை குத்திய விவகாரம்: ஓ.பி.எஸ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்
சென்னை: குழந்தை கையில் ஜெயலலிதா பச்சை குத்திய விவகாரத்தில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24 ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் ஒருபகுதியாக சென்னை வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் முதல்வர் ஜெயலலிதா படத்தை பச்சை குத்திக்கொண்டனர். இதில் ஒரு சிறுமிக்கு ஜெயலலிதா உருவம் பச்சை குத்தப்பட்டது. அப்போது, பச்சை குத்திக் கொண்ட அந்த சிறுமி வலி தாங்காமல் அழும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்நிலையில் இந்த விவகாரத்தில் விவகாரத்தில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்பது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தில் அளித்த மனுவில் பாடம் நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications