ஊட்டி: எஸ்.பியின் மகளை அடித்து துன்புறுத்திய 2 ஆசிரியைகள் கைது
ஊட்டி: எஸ்.பி.,யின் 5 வயது மகளை அடித்து துன்புறுத்தியதாக, தனியார் பள்ளி ஆசிரியைகள் இருவரை ஊட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி., செந்தில்குமாரின் மகள்; ஊட்டியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், முதல் வகுப்பு படித்து வந்தார்.
'அவரை, பள்ளி ஆசிரியை எஸ்.சுகந்தி, டி.சுகந்தி ஆகியோர், கடந்த இரு மாதமாக 'அடித்து துன்புறுத்தியதாக செய்து வந்தார்' என, மாணவியின் பாட்டி மரகதம்மாள், ஊட்டி ஜி1 போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப் பதிவு செய்து, புகாருக்குள்ளான இரு ஆசிரியைகளை கைது செய்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 'குறிப்பிட்ட இரு ஆசிரியைகள், தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வருகின்றனர் என, எஸ்.பி.,யின் மகள் கூறி வந்துள்ளார்; கடந்த இரு மாதமாக இப்பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில், பள்ளியில் இருந்து தனது மகளின் மாற்றுச் சான்றிதழை பெற்ற அவரது பெற்றோர், அந்த ஆசிரியை மீது, புகார் கொடுத்தனர்; அதன் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
வாக்குவாதம்
கைது செய்யப்பட்ட ஆசிரியைகளை, போலீஸ் ஜீப்பில் ஏற்றி, கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து செல்ல முற்பட்ட போது, பள்ளி ஆசிரியைகள், சில வக்கீல்கள் வாகனத்தை முற்றுகையிட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த களேபரத்தில், போலீஸ் ஜீப்பின் முன்புறம் இருந்த 'கிரில்' உடைந்தது.
இரு மாதமாக அடி
இரு மாதங்களுக்கு மேலாக இரு ஆசிரியைகள், சம்பந்தப்பட்ட குழந்தையை 'டார்ச்சர்' கொடுத்ததாக குழந்தையின் பாட்டி மரகதம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு ஆசிரியர்களை கைது செய்தோம்," என்று ஜி1 இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
திடீர் கைது ஏன்?
சம்பவம் பற்றி சக ஆசிரியைகள் கூறுகையில், 'பள்ளிக்கு வந்த போலீசார், விசாரணை என்ற பெயரில், ஆசிரியைகளை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்; திடீரென அவர்களை கைது செய்து விட்டனர். ஆசிரியைகளுக்கு ஆதரவாக, காவல் நிலையத்திற்கு வந்த வக்கீல்களுக்கு எந்தவொரு தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை என்றனர். புகாருக்குள்ளான ஆசிரியைகளிடம் பேசுவதற்கு கூட அனுமதிக்கவில்லை' என்றனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியைகள் இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது. ஆசிரியைகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications