மாணவர்கள் முன்னிலையில் அடித்துக் கொண்ட இரு ஆசிரியைகள் சஸ்பென்ட்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் முன்னிலையில் அடித்துக் கொண்ட இரு ஆசிரியைகள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலை மாருதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜமுனாராணி, லதா ஆகியோர் ஆசிரியைகளாகப் பணியாற்றுகின்றனர். மாணவர்களின் மதிப்பெண்களை பதிவு செய்யும் நோட்டு தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது.

இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க பள்ளியிலேயே மாணவர்கள் முன்னிலையில் இருவரும் மோதிக் கொண்டனர். இதில் ஜமுனாராணியை லதா கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதையடுத்து உதவி தொடக்க கல்வி அலுவலர் மாதவன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

ஆனாலும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. இருவருமே மாறி மாறி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு பேரையுமே மாவட்ட கல்வி நிர்வாகம் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+