எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.. உனக்கு இரண்டு கண்ணும் இருக்கக் கூடாது.. தினகரன் அதிரடி!!
Recommended Video

சென்னை: இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை பரப்பியுள்ளது. தனக்கு கிடைக்காமல் போனால், யாருக்குமே இரட்டை இலை கிடைக்காத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே தினகரன் தரப்பின் திட்டமாக தெரிகிறது.
இரட்டை இலை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள இரட்டை இலையைத் திரும்பப் பெற ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியும், தினகரன் அணியும் மோதி வருகின்றன.
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அதன் பின்னர் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. தினகரன் தனித்து விடப்பட்டார்.

இரட்டை இலையை முடக்கக் கோரிக்கை
நேற்று இரட்டை இலை தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் வந்தபோது தினகரன் தரப்பில் ஆஜராகி வாதாடிய முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று வாதிட்டு அனைத்துத் தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

பட்டி தொட்டியெங்கும் இரட்டை இலை
எம்ஜிஆரின் சின்னமாக கருதப்படும், தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் மக்களின் மனங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று ஜஸ்ட் லைக் தட் தினகரன் தரப்பு கூறியிருப்பது நீண்ட கால அதிமுக விசுவாசிகளை அதிர வைத்துள்ளது.

யாருக்கும் சின்னம் கிடைக்கக் கூடாது
தனக்கு கிடைக்காவிட்டால் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்பதே தினகரன் தரப்பின் திட்டமாக தெரிகிறது. அதாவது தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்ற எண்ணம்தான் தினகரன் தரப்பின் இந்த வாதத்திற்குக் காரணம் என்று சொல்கிறார்கள்.

தினகரன் தரப்பின் கோரிக்கைக்குக் காரணம்
புதுக் கட்சித் திட்டத்தில் தற்போது தினகரன் இருக்கிறார். அதிமுக தனக்கு சாத்தியப்படாமல் போனால் புதுக் கட்சி தொடங்குவதே அவரது திட்டமாக உள்ளது. அலுவலகத்திற்கு இடம் கூட பார்த்து வருகிறார்கள். இந்த யோசனைதான், இரட்டை இலையை முடக்கும் கோரிக்கைக்கு பின்னால் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சின்னத்தை முடக்குமா தேர்தல் ஆணையம்
அதேசமயம், இந்தக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களின் வாதத்தை தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளதால் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் யாருக்கு பாதகமாக தீர்ப்பு வரப் போகிறது என்ற பதைபதைப்பில் தற்போது அதிமுகவின் இரு அணிகளம் உள்ளன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications