திருச்சியில் ஓபிஎஸ் மீது தாக்குதல் முயற்சி... இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது?

ஓபிஎஸ் மீது தாக்குதல் முயற்சி நடந்த நிலையில் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை கத்தியால் கத்த முயற்சித்த சம்பவத்தைத் தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதிமுக அணிகளாக சிதறிய நிலையில் ஓபிஎஸ் கையை வெட்டுவேன் என தினகரன் ஆதரவாளர் கலைராஜன் பகிரங்கமாக மிரட்டினார். தேனி அருகே ஓபிஎஸ் கார் மீது கல்வீசித் தாக்கப்பட்டது.

Team OPS to demand Z security for O. Panneerselvam

ஆர்கே நகர் இடைத் தேர்தலின் போதும் ஓபிஎஸ்-க்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து ஓபிஎஸ்-க்கு மத்திய படை பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் அவரது ஆதரவாளர்கள் மனு அளித்தனர்.

இதனை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் ஓபிஎஸ்-க்கு 8 துணை ராணுவத்தினரைக் கொண்ட ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இவ்வளவு பாதுகாப்பையும் மீறி திருச்சி விமான நிலையத்தில் சோலைராஜன் என்பவர் ஓபிஎஸ்ஸை கத்தியால் குத்த முயற்சித்திருக்கிறார்.

இது ஓபிஎஸ் ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து ஓபிஎஸ்-க்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கோரி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் விரைவில் அவரது ஆதரவாளர்கள் மனு அளிக்க கூடும் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+