டெல்லி பிரதிநிதி, அட்வகேட் ஜெனரல்... எந்த பதவியுமே கிடைக்கலையே... புலம்பும் ஓபிஎஸ் குரூப்
அணிகள் இணைப்புக்குப் பின்னர் தங்களுக்கு பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்த ஓபிஎஸ் அணி தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனராம்.
Recommended Video

சென்னை: அதிமுகவின் எடப்பாடி அணியுடன் இணைந்த பின்னர் எதிர்பார்த்த எந்த ஒரு பதவியுமே தங்களுக்கு கிடைக்கவில்லை என புலம்பி வருகிறது ஓபிஎஸ் அணி என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈபிஎஸ் அணியுடன் இணைந்த நிலையில் துணை முதல்வரானார் ஓபிஎஸ். மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகிவிட்டார். அதேநேரத்தில் ஓபிஎஸ் அணியில் தலைவர்கள் பலரும் பதவியை ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர்.

டெல்லி பிரதிநிதி
குறிப்பாக டெல்லிக்கான தமிழக பிரதிநிதி, குடிநீர் வாரியம், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி ஆகியவற்றைத்தான் ஓபிஎஸ் அணி தலைவர்கள் குறிவைத்தனர். ஆனால் டெல்லி பிரதிநிதி பதவி நிச்சயம் கிடைக்காது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ராஜ்யசபா எம்.பியும் மாஜி அமைச்சரும் ரொம்பவே ஏமாந்துவிட்டனராம்.

மத்திய அமைச்சர் பதவி
இதையடுத்து மத்திய அமைச்சர் பதவியை எப்படியும் வாங்கிவிடுவது என ராஜ்யசபா எம்.பி. ரொம்பவே மெனக்கெட்டு லாபி செய்திருக்கிறார். அதுவும் கிடைக்காமல் போக ஏக வருத்தத்தில் இருக்கிறாராம். அதேபோல் டெல்லி பிரதிநிதிதான் கிடைக்கலை.. குடிநீர் வாரியம் வாங்கிதாங்க என ஓபிஎஸ்ஸை நெருக்கியிருக்கிறார் மாஜி அமைச்சர்.

அட்வகேட் ஜெனரல் பதவி
இப்போதைக்கு எதுவும் வேண்டாங்கண்ணே... என எடப்பாடி தரப்பு நழுவ 'வட போச்சே...' என வதங்கி போயிருக்கிறாராம் மாஜி. தென்மாவட்டத்துக்காரருக்கு தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பதவி மீது குறி. இதற்கேற்ப அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி ராஜினாமா செய்ய ரொம்பவே நம்பிக்கையாக இருந்திருக்கிறார்.

டெல்லி உத்தரவால்..
ஆனால் டெல்லி உத்தரவில் சென்னை பிரமுகருக்கு நெருக்கமானவருக்கு அந்த பதவி போய்விட்டது... இதில் தென்மாவட்டத்துக்காரர் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்... அதேபோல் மலைக்கோட்டை மாவட்டத்துக்காரரும் வாரியம் ஏதாவது ஒன்றை வாங்கித் தாங்க... மாவட்டத்தில் மதிப்பா இருக்கும் என சொல்லிப் பார்த்திருக்கிறார்... ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்படி ஓபிஎஸ் அணியில் உள்ள ஒவ்வொரு தலைவரும் பதவிக்காக இலவு காத்த கிளியாக இன்னமும் காத்து கொண்டே இருக்கிறார்களாம்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன?












Click it and Unblock the Notifications