விவேக் ஜெயராமனுக்கு வேட்டு வைக்கும் ஓபிஎஸ்... ஜாஸ் சினிமாஸில் வேட்டை வேட்டை ஆரம்பம்?
தினகரனுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் விவேக் ஜெயராமனை குறிவைத்துக் கொண்டிருக்கிறதாம் ஓபிஎஸ் கோஷ்டி.
சென்னை: ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் மூலம் குடைச்சல் கொடுத்து வரும் இளவரசி மகன் விவேக் ஜெயரமானுக்கு வேட்டு வைக்கும் முயற்சிகளில் ஓபிஎஸ் கோஷ்டி மும்முரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகளை இணையவிடாமல் தினகரன் கோஷ்டி குறுக்குசால் ஓட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் பத்திரிகைகள் மூலமாகவே தினகரன் கோஷ்டி இந்த சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது.
தினகரன் கோஷ்டியின் மிகப் பெரிய ஆயுதங்களாக இருக்கும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகையை நிர்வகிப்பது இளவரசி மகன் விவேக் ஜெயராமன்தான். ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இணையும் நிலையில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆரையும் கைப்பற்றுவது என்பது ஒரு அஜெண்டா.

முட்டுக்கட்டை விவேக்
ஆனால் இதை நிர்வகித்து வரும் விவேக் ஜெயராமன் மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக கருதுகிறது ஓபிஎஸ் கோஷ்டி. இதனால் விவேக் ஜெயராமனுடன் ஓபிஎஸ் அணி சாத்வீக முறையில் சமாதானப் பேச்சுகளை நடத்திப் பார்த்தது.

தினகரனுக்கு தளபதி
விவேக் ஜெயராமனோ தாம் ஒரு தொழிலதிபர் மட்டுமே என பட்டும் படாமல் ஒதுங்கிக் கொண்டராம். அதேநேரத்தில் மறைமுகமாக தினகரனுக்கு அனைத்துமாக இருந்து வருவதும் விவேக் ஜெயராமன்தான்.

ஜாஸ் சினிமாஸுக்கு குறி
இதனால் விவேக்கு செக் வைக்கும் வகையில் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை குறிவைக்கிறது இப்போது ஓபிஎஸ் அணி. அனேகமாக தினகரனுக்கு முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள் வீடுகளுக்கு முன்பாக ஜாஸ் சினிமாஸுக்கு வருமான வரித்துறை பட்டாளம் நுழைவதற்கான சாத்தியங்களே அதிகமாம்.

போட்டுக் கொடுக்கும் திவாகரன் தரப்பு
ஏற்கனவே திவாகரன் தரப்பை அதிமுகவுக்குள் நுழையவிடாமல் தினகரனின் தளபதியாக நின்று வருகிறார் விவேக் ஜெயராமன். இதனால் கடுப்பில் உள்ள திவாகரன் தரப்பும் விவேக்குக்கு எதிரான ஏகப்பட்ட ஆதாரங்களை வருமான வரித்துறைக்கு அள்ளி அனுப்பி வருகிறதாம். ஆக அடுத்த வேட்டை விவேக்கின் ஜாஸ் சினிமாஸில்தானாம்!
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications