அய்யய்யோ 11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா? ஆளைவிடுங்கப்பா.. அலறிய தினகரன்
ஓபிஎஸ் அணி 11 எம்.எல்.ஏக்கள் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறதாம் சசிகலா அணி.
சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலையே எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் 11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் தாங்க முடியாது என கூறி ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையை கைவிட முடிவு செய்துள்ளாராம் டிடிவி தினகரன்.
அதிமுகவின் துணைப் பொதுச்செயலராகிவிட்ட டி.டி.வி. தினகரன் தினமும் ஏதாவது ஒரு கூட்டத்தை கூட்டி இருப்பை பதிவு செய்து வருகிறார். இதனடிப்படையில் சசிகலா அணியின் மூத்த தலைவர்களை அழைத்து அண்மையில் தினகரன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

அப்போது ஓபிஎஸ் ஆதரவு 11 எம்.எல்.ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என யோசனை தெரிவித்திருக்கிறார். ஆனால் அதிமுக நிர்வாகிகளோ முதலில் 2 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தில் சசிகலாவின் பொதுச்செயலர் நியமனமே கேள்விக்குறியாகி இருக்கிறது; தற்போது 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்துக்குப் போவார்கள்.. சிக்கலுக்கு மேல் சிக்கல்தான் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் 11 எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஒருவேளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டால் 6 மாதங்களுக்குள் அத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும். ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலிலேயே நாம் என்னவாகப் போகிறோம் என்பது தெரியவில்லை; இன்னும் 11 தொகுதிகளில் இடைத்தேர்தல் என்றால் திமுக எளிதாக வென்றுவிடும். அப்படி திமுக வென்றுவிட்டால் ஆட்சியே பறிபோகும் நிலைமையும் உருவாகிவிடும் எனவும் எச்சரித்திருக்கின்றனர்.
இதை பொறுமையாக கேட்டுக் கொண்ட தினகரன், ஆர்.கே.நகரில் முதலில் ஜெயிக்க வழியைப் பார்ப்போம்... அதில் வெற்றி பெற்ற பிறகு யோசிப்போம். 11 தொகுதி இடைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நம்மால் சந்திக்க முடியாது; அதனால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது இப்போது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவோம் என்ற முடிவைத் தெரிவித்தாராம். மக்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சசி அணியை பீதியடைய வைத்து வருகிறதாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications