வேலை பளு தாங்க முடியலை: குமுறிய பெண் சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை
சென்னை: சென்னை தரமணியில் உள்ள ஐடி பார்க்கின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சாப்ட்வேர் என்ஜினியர் ரேஷ்மா வேலைப் பளுவால் தான் மனம் சோரந்திருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்திருந்திருக்கிறார்.
கேரளா மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த புஷ்பரகரன், ரெஜினி தம்பதியின் இளைய மகள் பி. ரேஷ்மா(24). அவர் பெங்களூரில் பி.இ. படித்துவிட்டு சென்னை தரமணியில் உள்ள அஸ்ஸென்டாஸ் ஐடி பார்க்கில் இருக்கும் விஷுவல் கிராபிக்ஸ் கம்ப்யூட்டிங் சர்வீசஸ் இந்தியா பிவிடி லிமிடெட்டில் வேலைக்கு சேர்ந்தார்.
அவர் வேளச்சேரியில் உள்ள பெண்கள் ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவர் கடந்த புதன்கிழமை இரவு அலுவலகத்தின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது சகோதரர் ரன்தீப் கூறுகையில்,
தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் ரேஷ்மா எங்களுடன் போனில் பேசினார். அப்போது வேலைப் பளு அதிகமாக இருப்பதாக தெரிவித்தார் என்றார்.
வேலை பிடிக்கவில்லை என்றால் வந்துவிடு என்று குடும்பத்தார் கூறியதற்கு இல்லை நான் வேலை பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார் ரேஷ்மா.
தனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வருவதாக ரேஷ்மா தினமும் இரவு வேளையில் அழுததாக அவருடன் வேலை பார்த்த ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார். ரேஷ்மா தனது பெற்றோர், சகோதரர், சகோதரி ரெமதிா ஆகியோருக்கு தனித்தனியே 4 கடிதங்கள் எழுதி வைத்துள்ளார். அதில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தனிமை வாட்டுவதால் வாழ விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications