உடல் பருமன் சிகிச்சைக்காக சென்ற பெண் மரணம்.. வீட்டு வாசலில் உடலை வீசிய தனியார் மருத்துவமனை!
உடல்பருமனை குறைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார். அவரது உடலை தனியார் மருத்துவமனை வீட்டு வாசலில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
சேலம் : தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வரும் மாணவி பாக்யஸ்ரீ உடல்பருமனை குறைக்கும் சிகிச்சையில் உயிரிழ்ந்த நிலையில், அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் அவரது உடலை வீட்டு வாசலில் வீசிச் சென்றுள்ளனர் தனியார் மருத்தவமனையினர்.
ஓமலூரைச் சேர்ந்த சக்திவேல் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுனராக உள்ளார், இவரது மனைவி மங்கையர்க்கரசி நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது ஒரே மகள் பாக்யஸ்ரீ சேலம் தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார்.

இந்நிலையில் உடல்பருமனை குறைப்பதற்காகவும், சளி பிரச்னையை சரி செய்வதற்காகவும் கடந்த ஒரு வாரமாக சித்தோடு அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பாக்யஸ்ரீயை அவரது பெற்றோரும் உடன் இருந்து கவனித்து வந்துள்ளனர்.
நேற்று உறவினர் ஒருவரின் சுபநிகழ்ச்சிக்கு செல்வதால் பாக்யஸ்ரீயின் உடல்நிலை குறித்து பெற்றோர் மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு உடல்நிலையில் பிரச்னை இல்லை, சென்று வரலாம் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தனர்.
பிற்பகலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது கூட பாக்யஸ்ரீ நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் சக்திவேலும், மங்கையர்கரசியும் வீடு திரும்பிய போது பாக்யஸ்ரீயின் உடல் அங்கு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பாக்யஸ்ரீ திடீரென உயிரிழந்தது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காமல் வீட்டு வாசலில் இறந்த மாணவியின் உடலை வீசிவிட்டு சென்றுள்ளது தனியார் மருத்துவமனை. இதனையடுத்து தகவல் கேட்க மருத்துவமனையை பெற்றோர் தொடர்பு கொண்ட போதும் பதிலளிக்காததால் தங்கள் பெண்ணின் மர்ம மரணத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications