திமுக கூட்டணியில் இணைந்தது தெலுங்கர் முன்னேற்ற கழகம்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தெலுங்கர் முன்னேற்ற நிறுவனத் தலைவர் ஜி. காமாட்சி நாயுடு தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்த பலர் திமுகவில் இணைந்தனர்.
திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜி. காமாட்சி நாயுடு தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்தத மாநில நிர்வாகி, பொதுச்செயலாளர் என்.சந்திரபாபு நாயுடு - பொருளாளர் பிரசன்ன பாண்டியன் - அமைப்பாளர் உதயகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் க.பொன்முடி, இராணிப்பேட்டை ஆர்.காந்தி தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், சட்டத்துறைச் செயலாளர் இரா.கிரிராஜன், சட்டத்துறை துணைச் செயலாளர் கே.எஸ்.இரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications