For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் 'பவரைக்' காட்டும் அக்னி பகவான்.. நேற்று ஒரே நாளில் 8 நகரங்களில் சதம்!

தமிழகத்தில் மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலைக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கடற்காற்று தடுக்கப்படுவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெப்பச்சலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திடீர் திடீரென மழை பெய்தது.

Temperature started to increase in Tamil Nadu : Chennai Meteorological Center

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது. மேலைக்காற்றின் வேகம் அதிகரிப்பால் கடற்காற்று தடுக்கப்படுவதே வெயிலின் தாக்கத்திற்கு காரணம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெயில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் திசையை பொறுத்து வெயிலின் அளவு மாறுபடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நேற்று மட்டும் 8 நகரங்களில் வெயில் சதமடித்துள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

English summary
Chennai Meteorological Center has reported that temprature started to increase in Tamil Nadu. The reason for this is the prevention of sea air because of the speed of the air.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X