கொளுத்தும் வெயில்: 9 நகரங்களில் சதம்... திருப்பத்தூரில் 104 டிகிரி
வேலூர்: தமிழகத்தில் 9 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது. திருப்பத்தூரில் அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
கடந்த ஒரு வார காலமாகவே சதத்தை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. சென்னை தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக நேற்று 106 டிகிரி வரை கொளுத்தியுள்ளது வெயில்.

தமிழ்நாட்டில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
மேலும் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு சூரியன் மறைந்த பிறகும் பகலில் அடித்த வெயிலின் தாக்கம் காரணமாக அனலாக உள்ளதால் வீட்டில் இருப்பவர்கள் கூட புழுக்கத்தில் தவிக்கும் நிலை காணப்படுகிறது
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகபட்சமாக திருப்பத்தூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது. அடுத்து வரும் நாள்களுக்கு வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை பதிவான வெயில் நிலவரம் (டிகிரி ஃபாரன்ஹீட்டில்)
திருப்பத்தூர் - 104
சேலம் - 102
மதுரை - 102
கரூர் - 102
திருச்சி - 102
பாளையங்கோட்டை - 102
தருமபுரி - 102
வேலூர் - 100
கோவை - 100
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications