அனலால் தகிக்கும் தமிழகம்: வேலூர், திருச்சி உள்பட 11 இடங்களில் 106 டிகிரி வெப்பம் பதிவு
சென்னை: தமிழகத்தில் திருச்சி, வேலூரில் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆறுகளில் தண்ணீர் பெருகியது. அந்த மகிழ்ச்சி சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. பிப்ரவரியிலேயே வெப்பம் தகிக்கத் தொடங்கிவிட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடையின் தொடக்கத்திலேயே வெயில் வறுத்தெடுக்க தொடங்கியது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கம் ஒரு சில நாள்களுக்கு இதே நிலையில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பகல் நேரங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்பதால் கடலோர மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.
லேசான மழை:
தமிழகத்தின் பெரும்பாலான பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டாலும், மூன்று இடங்களில் மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் 20 மி.மீ., சிவகிரியில் 10 மி.மீ, ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் இரு பகுதிகளில் மழை பெய்தாலும், பாளையங்கோட்டையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று பதிவான வெயில் அளவு:
(ஃபாரன்ஹீட்டில்):
வேலூர் 106
திருத்தணி 106
திருப்பத்தூர் 106
திருச்சி 106
சேலம் 106
தருமபுரி 106
பாளையங்கோட்டை 104
மதுரை 104
சென்னை 102
கோவை 102












Click it and Unblock the Notifications