நாமக்கல் அருகே தூக்குத்தேர் முறிந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் காயம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவின் போது தூக்குத்தேர் முறிந்து விழுந்ததில் ஓருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தொடங்கி தூக்குத்தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா கடந்த 11ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அதைதொடர்ந்து 32 உயரம் கொண்ட தூக்குத்தேர் அமைக்கப்பட்டு, கடந்த 4 நாட்களாக அருகில் உள்ள கணபதிபாளையம், செல்லிபாளையம், தொட்டிப்பட்டி, ஓடக்காட்டூர், குஞ்சாயூர், வடுக்கப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு கிராம சுற்று நடைபெற்றது.
தூக்குத்தேர் உள்ளூர் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது மாலை 5 மணியளவில் திடீரென தூக்குத்தேர் மேல் பகுதி முறிந்து விழுந்தது. இதில் கணபாதிபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன்(42) உள்ளிட்ட 4 பேர் சிக்கிக்கொண்டனர். படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் நாமக்கல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரவிச்சந்திரன் உயரிழந்தார். ஜெகதீசன், கார்த்திக், ரமேஷ் ஆகிய 3 பேரும் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேரில் சிக்கி உயிரிழந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் பக்தர்களை நாமக்கல் எம்எல்ஏ கேபிபி.பாஸ்கர், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இவ்விபத்து குறித்து மோகனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications