For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 43.63 கோடி செலவில் ஜெ.வுக்கு நினைவுமண்டபம்... பிப்ரவரி 24ல் அடிக்கல்?

ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கான டெண்டரின் ஆரம்ப கட்ட விலையாக ரூ. 43.63 கோடியை பொதுப்பணித்துறை நிர்ணயம் செய்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் கட்ட ஆரம்ப கட்ட டெண்ராக பொதுப்பணித்துறை சார்பில் ரூ. 43.63 காடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இறுதி டெண்டர் ஒதுக்கீடு பிப்ரவரி 7ல் முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எம்ஜிஆர் சமாதி அருமே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அவருக்கு நினைவு மண்டபம் கட்ட அரசு முடிவு செய்து அறிவித்தது. இதன்படி ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட பொதுப்பணித்துறை சார்பாப ரூ. 43.63 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tender opened for Jayalalitha memorial construction at Marina beach

ரூ. 43.63 கோடி அல்லது அதற்கு குறைவாக கட்டணம் கோருவோருக்கு பிப்ரவரி 7ம் தேதி டெண்டர் இறுதி செய்து ஒதுக்கப்பட உள்ளது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ல் இதற்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளதாகவும், ஓராண்டிற்குள் நினைவிடம் கட்டி முடிக்க அரசு அவகாசம் நிர்ணயித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அமைப்பதற்கான பணிகளையும் அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu government opened tender for Jayalalitha memorial construction at Marina, the tender amount for this project begins from Rs.43.63 crores and the final tender alloted person will be decided on February 7th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X