சசி ஆதரவாளர்களுக்கு மட்டும் டெண்டர்.. பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே டெண்டர் கொடுப்பதாக குற்றம்சாட்டி ஓபிஎஸ் ஆதரவு பெண் எம்எல்ஏ பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சசிகலா ஆதரவாளர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து ஓபிஎஸ் ஆதரவு பெண் எம்எல்ஏவான மனோரஞ்சிதம் நாகராஜ் இன்று பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளின் குடி நீர் தேவைக்காக கிணறு அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல், மோட்டர் பழுது நீக்குதல் போன்ற தேவைகளுக்காக 38 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைகளுக்கான டெண்டர் பற்றி பேச ஊத்தங்கரை பி.டி.ஒ அலுவகம் சென்றார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ். அங்கு 38 லட்ச ரூபாய்க்கான பொது டெண்டர் விடாமல் முழுவதுமாக சசிகலா ஆதரவு அதிமுகவினருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மனோரஞ்சிதத்திற்கு அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
இதனால் கடுப்பான எம்எல்ஏ மனோரஞ்சிதம் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் ஒன்றிய அலுவலக வாசலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த போராட்டத்திற்கு ஊத்தங்கரை திமுகவினரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications